செங்குன்றம் – புழல் ஏரிகரை மீது நடைபயிற்சி மேற்கொள்வோர் புதிய சங்கம் துவக்கம்…
1 min read
செங்குன்றம் – புழல் ஏரி கரையின் மீது நடைபயிற்சி மேற்கொள்வோர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு பொது அமைப்பை (சங்கம்) உருவாக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

இச்சங்கத்தின் தலைவராக இரா.ஏ.பாபு, செயலாளராக டி.பவானி சங்கர், பொருளாளராக இ.எஸ்.கே. குமார், கௌரவ ஆலோசகர்களாக டி.கோபி, ஜி.ராஜேந்திரன், துணைத்தலைவர்களாக கிராண்ட்லைன் சி.ஏழுமலை, குணாளன், வித்யபாரதி, துணைச் செயலாளர்களாக கரிகாலன் நகர் செல்வம், ஜெ.எஸ். கண்ணன், ஆர்.சுரேஷ், சட்ட ஆலோசர்களாக வழக்கறிஞர்கள் இ.அன்பரசு, ஆர்.செல்வமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செயற்குழு உறுப்பினர்களாக எம்.மலையப்பன், ஏஎல்என். லோகநாதன், கே.மோகன்ராஜ், ஏ.மோகன், டி.கே. ரெட்டி, பி.வி. ரமேஷ்பாபு, எஸ்.சிவபிரகாஷ், எம்டிவி. இளங்கோவன், ஜி.பாரிசெல்வம், நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், ரா.மா. தனபாலன், இ.பாலாஜி, சி.தேவன், பி.அன்பு, பி.சீனிவாசன், பி.லோகைய்யா, எஸ்.விமலா, டி.அக்பர், கே.இம்மானுவேல் சுந்தர், டி.சாந்தகுமார், ஜி.பாலசுப்பிரமணி, ராமன், தமிழரசன், கே.மந்திரமூர்த்தி, ரூஹுல்லா, அருளானந்தம், ஜி.கண்ணன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இக் கூட்டத்தில் நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்கம் சார்பாக, ஒரு காவலாளியை நியமித்து அதன் மூலம் ஏரியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கேட்டின் சாவியை முறைப்படி பூட்டி பராமரிக்க வேண்டுமென்றும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணித்து காவல்துறையினரிடம் புகார் , அளிக்க வேண்டுமென்றும், பொதுப்பணித்துறை, காவல் துறை சார்ந்த அரசு அதிகாரிகளுக்கும் உறுதுணையாக செயல்பட வேண்டுமென்றும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 125க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – செங்குன்றம் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
