Mon. Oct 19th, 2020

சென்னையில், மாலை தீபம், வாக்காளர் மனசு பத்திரிகை அலுவலகம் திறப்பு விழா…

1 min read

மாலை தீபம் நாளிதழ், வாக்காளர் மனசு மாத இதழ்களின் அலுவலகம் திறப்பு விழா, சென்னை ஆழ்வார்பேட்டை கவிஞர் பாரதிதாசன் சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாலை தீபம் நாளிதழ், வாக்காளர் மனசு மாத இதழ்களின் செய்தி ஆசிரியர் பி.ஜி. முகுந்தன் வரவேற்புரையாற்றினார். வாக்காளர் மனசு மாத இதழின் ஆசிரியர் ஏபிவி ஜான்சன், மாலை தீபம் நாளிதழின் ஆசிரியர் இ.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ந் நிகழ்ச்சியில், வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார் ஐஆர்எஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி, நாளிதழின் அலுவலகத்தை திறந்து வைத்தார். மாலை தீபம் நாளிதழின் துணை ஆசிரியர் ஜி.எல்.கவிதா நன்றி உரையாற்றினார். இதில் பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முனைவர் பூபாலமுருகன், ரெட்ஹில்ஸ் நண்பன் இதழின் ஆசிரியர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் – செங்குன்றம் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *