Sat. Oct 24th, 2020

சென்னையில், உழைப்பாளி மருத்துவமனை திறப்புவிழா…

1 min read

சித்த மருத்துவர் டாக்டர் K.வீரபாபு அவர்களுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் சால்வை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார் !
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5394 பேர்களுக்கு சித்த மருத்துவ முறையில், இலவச சிகிச்சை அளித்து காப்பாற்றியவர் இவர்.
தற்போது 80 பேர்கள் இவருடைய சிகிச்சையில் நலம் பெற்று வருகின்றனர் !

மத்திய மாநில அரசுகள் கொரோனா தொற்றைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து வருவதாக சொல்லி வரும் சமயத்தில், ஒரே ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் தன்னிடம் வந்த அனைவரையும் காப்பாற்றினார் இவர். இன்று வரை தமிழக அரசு இவருக்கு எந்த ஒரு உதவியும் செய்தது இல்லை ! தன்னுடைய நண்பர்கள் மற்றும் சக மருத்துவர்கள் இவருக்கு உதவி செய்து வருவதாக சொல்கிறார் !

இந்த சூழலில் சென்னை சாலிகிராமத்தில், வெறும் 10 ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கும் விதமாக ” உழைப்பாளி மருத்துவமனை துவங்கப்பட்டது. அதில், Dr. K.வீரபாபு (BSMS) உட்பட மருத்துவர்கள் குழுவாக செயல்பட உள்ளனர். அதில், சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர், S.அன்பழகன் அவர்களும், பொது மருத்துவர், M.ஜோதி அவர்களும், மயக்க மருத்துவ, மருத்துவர் J.விஜய் அவர்களும்,
பொது மருத்துவர் B.மணிகண்டன் ஆகியோர் ஏழை,எளிய மக்களுக்கு எளிதாக மருத்துவ வசதி கிடைக்க செய்யும் நோக்கத்தில், ஒன்றாக குழுவாக இணைந்து இந்த மருத்துவமனையை துவங்கி உள்ளனர்.

அந்த மருத்துவ குழுவினர் அனைவரையும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், அந்த சங்கத்தின் மாநில தலைவர் DSR.சுபாஷ் அவர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர் நம்மிடம் கூறுகையில்,
” கொரோனா தொற்றே இல்லாதவர்களை அச்சுறுத்தல் செய்து, பணத்தை கொள்ளையடித்து, கொன்று குவித்து வருபவர்கள் மத்தியில், உண்மையான மருத்துவ சேவை செய்யும் இவர்கள் அனைவரும் வாழும் தெய்வங்களே” என்று புகழாரம் சூட்டினார்.

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *