Mon. Oct 19th, 2020

சென்னை, மணலி புதுநகரை சேர்ந்த மாணவி, நுண்ணுயிர் சேகரிப்பில், உலக சாதனை…

1 min read

சென்னை, மணலி புது நகர் மாணவி, நுண்ணுயிர் புகைப்படங்கள் சேகரிப்பில் உலக சாதனை படைத்தமைக்கு, பாராட்டுகள் குவிகிறது,

சென்னை, மணலி புதுநகர், புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன், இவரின் மனைவி அனிதா, இந்த தம்பதிக்கு, சர்மிளா, தோஷிபா என்ற இரு மகள்களும், ஸ்ரீகாந்த் என்ற மகனும் உள்ளார். அவரின் மூத்த மகள் சர்மிளா, அரும்பாக்கம் தனியார் கல்லூரியில், நுண்ணுயிரியல் பிரிவில் பிஎச்டி படிக்கிறார். இவர் கடந்த மூன்று மாதங்களாக கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகளை படமாக்கும் முயற்சியில் இறங்கினார். அதன்படி, அவர் ஆய்வு செய்து 17,017 நுண்ணுயிர்களை படமாக்கி சாதனை படைத்துள்ளார். இதை, நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் அங்கீகரித்து, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தது.

இதுகுறித்து, மாணவி சர்மிளா கூறுகையில் , நான் மண், தவளை ,பாம்பு தோல், பறவைகளின் இறகு போன்றவைகளில் நுண்ணுயிரிகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்துள்ளேன். எதிர்காலத்தில் பல தீவிர நோய்களுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது எனது இலக்காகும். இந்த முயற்சிக்கு உதவிய பெற்றோருக்கும், சகோதரர், சகோதரிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.

நிழல்.இன்- 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *