சோழவரம் ஒன்றிய அதிமுக சார்பில் முப்பெரும் விழா…
1 min read
சோழவரம் ஒன்றிய அதிமுக சார்பில், காரனோடை பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு நிழற்குடை திறப்பு மற்றும் இளைஞர், இளம் பெண்கள் பாசறை தொடக்க விழா, கழகக் கொடியேற்று விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சோழவரம் அதிமுக ஒன்றியச் செயலாளர் பி.கார்மேகம் தலைமை தாங்கினார். எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் எம்.மாரி வரவேற்றார்.
ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எம்ஜிஆர் சிலை நிழற்குடையை திறந்து வைத்து, இளம்பெண்கள் இளைஞர் பாசறை உறுப்பினர்கள் படிவங்களை வழங்கியும் கழகக் கொடியேற்றியும் வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஜி.ராஜேந்திரன், எஸ்.மனோகரன், ஜி.குணசேகர், பி.கே.செல்வம், ஒன்றியக் கவுன்சிலர் ஒரக்காடு பாஸ்கரன், கே.பார்த்திபன், கே.ஆர்.வெங்கடேசன், ஆத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் சற்குணன், வழக்கறிஞர் பி.கே.பாலன், பி.பிரபுதாஸ், சோழவரம் ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி முனிகிருஷ்ணன், காரனோடை வேல்முருகன், வழக்கறிஞர் பாலமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். ஒன்றியக் கவுன்சிலர் எம்.நாகவேல் நன்றி கூறினார்.
செய்தியாளர் – செங்குன்றம் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
