Mon. Oct 19th, 2020

திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில், கொரோனாவால் உயிரிழந்த பெண் உடலை அடக்கம் செய்த எஸ்.டி.பி கட்சியினர்…

1 min read

பொன்னேரி தொகுதியில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த SDPI கட்சி தன்னார்வலர்கள்! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி உட்பட்ட, அத்திப்பட்டு பகுதியைச் சார்ந்த சுமார் 55 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றால், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்தவரின் குடும்பத்தினர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உதவியை நாடினர்.
அதனடிப்படையில் உடனடியாக, திருவள்ளுர் கிழக்கு மாவட்ட பொது செயலாளர் முஹம்மது பாஷித், திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா தலைமையிலான குழுவினர் பொன்னேரி தொகுதி தலைவர் முஹம்மது ரபீக், செயலாளர் ஹபீப், வட சென்னை சகோதரர்கள் கவுஸ், சக்கூர்தீன், அப்துல் காதர், ஹமீத் செயல் வீரர்கள் ஆகியோர் கொண்ட குழு கொரோனோ தொற்றால் உயிரிழந்தவரின் உடலைப் பெற்று கண்ணியமான முறையில் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி எஸ்.டி.பி.ஐ. கட்சி தன்னார்வலர்கள் நல்லடக்கம் செய்தனர்.

செய்தியாளர் – செங்குன்றம் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *