Fri. Oct 23rd, 2020

சோழவரம் ஒன்றியக் கவுன்சிலர் நிதியில், இரண்டு புதிய தார் சாலைகள் பணி துவக்கம்…

1 min read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திமுகவின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆகியோரின் ஆலோசனைப்படி, சோழவரம் தெற்கு ஒன்றியம் நல்லூர் ஊராட்சி நல்லூர் சுடுகாட்டு சாலை, பாலமுருகன் நகர் ஆகிய இரண்டு இடங்களில் ஒன்றிய கவுன்சிலர் ரேவதி துரைவேல் மேம்பாட்டு நிதியிலிருந்து, புதிய தார்சாலை அமைக்கும் பணியினை சோழவரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான மீ.வே.கருணாகரன் துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட கவுன்சிலர் கீதாஅரசு, ஒன்றிய கவுன்சிலர் ரேவதி துரைவேல், நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி டில்லி, துணைத் தலைவர் செல்வி பாலகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர் – செங்குன்றம் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *