கும்முடிபூண்டியில் தனியார் தொழிற்சாலை சார்பில் நலத்திட்ட உதவிகள்…
1 min read
கும்மிடிப்பூண்டி அடுத்த, சிறுபுழல்பேட்டையில் திரிவேணி செம் டிரேட் நிறுவனத்தின் சமூக பணி திட்டத்தில், அப்பகுதி மக்களுக்கு நிவாரண உதவி, மரக்கன்றுகள் நடவு, மற்றும் கல்வி உதவி தொகையும் வழங்கப்பட்டது. கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்பேட்டையில் திரிவேணி செம் டிரேட் நிறுவனத்தின் சமூக பணி திட்டத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந் நிகழ்ச்சி தொழிற்சாலை நிர்வாக மேலாளர் வி.என்.ஷர்மா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குனர் மனோஜ் ஷர்மா, ரோட்டரி சங்க தலைவர் துரை, முன்னாள் தலைவர் ரவிக்குமார், செயலாளர் ரங்கநாதன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். விஜயகுமார் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் சிறுபுழல்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் எம்.சுசீலாமூர்த்தி , ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார், துணை தலைவர் வெற்றி வேந்தன் பங்கேற்று ஏழை, எளிய குடும்பத்தினருக்கு ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களை வழங்கினர். அதை தொடர்ந்து மரக்கன்றுகளை எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் நட்டார். பின்னர் சிறுபுழல்பேட்டை பகுதியை சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் 13 பேருக்கு, கல்வி நிதியாக திரிவேணி செம் டிரேட் நிறுவன நிர்வாக மேலாளர் ஏ.என்.ஷர்மா, ஊராட்சி மன்ற தலைவர் எம்.சுசிலா மூர்த்தியிடம் வழங்கினார்.

மேலும் இந் நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி நகர அதிமுக செயலாளர் மு.க.சேகர், அதிமுக நிர்வாகிகள் ரமேஷ்குமார், எம்.எஸ்.எஸ்.சரவணன்,விஸ்வநாதன்,ராஜா, விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா முடிவில் ஒருங்கிணைப்பாளர் எஸ்.முனிரத்தினம் நன்றி கூறினார்.
செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777
