Fri. Oct 23rd, 2020

செங்குன்றம் நூலக வாசகர் வட்டம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது…

1 min read

செங்குன்றம் முழு நேர கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் இரா.ஏ.பாபு தலைமையில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாசகர் வட்ட செயலாளரும் செங்குன்றம் நூலகருமான ஜோதிபாபு முன்னிலை வகித்தார்.
நூலகத்தில் பணிபுரியும் நான்கு தினக்கூலி ஒப்பந்த பணியாளர்கள் கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதை அறிந்து உடனடியாக அவர்களுக்கு முதல் கட்டமாக தலா ரூ.4000, அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் கொண்ட நலத்திட்ட உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

செங்குன்றம் நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் செங்குன்றத்தில் நூலகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இரண்டாம் கட்டமாக நலத்திட்ட உதவிகள் தலா ரூ 2000, ஐந்து கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர் ஆர்.செல்வகுமார் பிறந்தநாளை முன்னிட்டு வாசகர் வட்டத்தின் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதில் எக்மோர் கன்னிமாரா நூலகர் உமாராணி, வாசகர் வட்ட துணைத் தலைவர் ஆர்.செல்வக்குமார், உறுப்பினர்கள் என்.சந்திரசேகர், பி.ஜி.ஆனந்தன், ஏ.திராவிடமணி, டி.ரமேஷ், எஸ்.டில்லி, டி.செல்வம், கா.கு.இலக்கியன், அரிகிருஷ்ணன், கோ.பொன்னிவளவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் – செங்குன்றம் நண்பன் அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *