பொன்னேரி அருகே, அண்ணாமலைச்சேரி மீனவ கிராமத்திற்கு 4.50 கோடியில், மீன் இறங்கு தளம் முதல்வர் திறந்து வைத்தார்…
1 min read
மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அண்ணாமலைச்சேரி மீனவ கிராமத்தில் ரூபாய் 4 கோடியே 40 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க, மீன் இறங்குதளம் வலை பின்னும் கட்டிடம், ஆண் பெண் இருபாலர் காண கழிப்பறைகள், மீனவர் ஓய்வு அறை, உள்ளிட்ட கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அப்போது, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் அண்ணாமலைச்சேரி கிராமத்தில் மீனவ மக்களுடன் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஒன்றிய கவுன்சிலர் சுமித்திரா குமார் வரவேற்றார்.

அப்போது மீன்வளத்துறை ஆய்வாளர் உத்தண்டி ராமன், சார் ஆய்வாளர் விஜலட்சுமி, மேற்பார்வையாளர் ராமசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பானு பிரசாத், மாங்கோடுமோகன், மோகனவடிவேல், பொன்னுதுரை, கோளூர் கோதண்டன், ஆறுமுகம், எர்ணாவூரன், பொன்னேரி பா.சங்கர், செல்வகுமார், கொண்டகரை அமிர்தலிங்கம், திருப்பாலைவனம் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் திருமலை, மீஞ்சூர் இளையராஜா, மாரி மற்றும் வாசு, அரசிபொன்னன், சிருளபாக்கம் சுகுமார்,
அவரிவாக்கம் ஏகாம்பரம், சுகுமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் 8939476777
