மாதவரம் காவல் சரகத்தின் சார்பில் இளம் சிறார்களுக்கு சீர்திருத்த அறிவுரை வழங்கப்பட்டது…
1 min read
மாவட்ட காவல் சரகத்தில், ஏற்கனவே குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட இளம் சிறார்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பது குறித்த சீர்திருத்த விழிப்புணர்வு முகாம் மாதவரம் தபால் பெட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட இளம் சிறார் நீதி துறை அதிகாரி சங்கீதா, அரசு மன நல அதிகாரி பேராசிரியர் அஞ்சுசோனி, வடசென்னை காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன், ஆகியோர் சிறார்களிடம் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடாமல் தங்கள் வாழ்வை மேம்படுத்துவது எப்படி என்பது குறித்து அறிவுரைகளை கூறி உரையாற்றினார்கள்.

இம்முகாமில் பங்கேற்ற இளம் சிறார்கள் குற்ற செயலில் ஈடுபட மாட்டோம் மது, புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களை வைத்துக் கொள்ள மாட்டோம் போன்ற உறுதிமொழி ஏற்றனர்.
முகாமில் உதவி ஆணையர்கள் அருள்சந்தோஷ் முத்து, ராஜேந்திரன், ஸ்ரீகாந்த் ஆய்வாளர்கள் ஜவகர் பீட்டர் ஆனந்தன் கோபிநாத் கண்ணகி மற்றும் சிறார்களின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாதவரம்,செய்தியாளர் – ரஞ்சித்
நிழல்.இன் 8939476777
