கிருஷ்ணா நதிநீர், தமிழக எல்லைக்கு வந்து சேந்தது, அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்…
1 min read
ஆந்திராவில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையை வந்தடைந்தது. ஆந்திராவில் 2000 கனஅடி திறக்கப்படும் தண்ணீர், தமிழக எல்லைப் பகுதியில் 100 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8
டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படவேண்டும். அந்த ஒப்பந்தத்தின்படி, இந்த பருவத்திற்கான தண்ணீர் கடந்த 18-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி திறந்து விடப்பட்டது. பின்னர் 2000கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அது தற்போது கண்டலேறு-பூண்டி கால்வாய் வழியாக தமிழக எல்லைப் பகுதியான ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது.

இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், நாளை காலை பூண்டி ஏரியை சென்றடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படும் என்றும், இந்த பருவத்தில் முதற்கட்டமாக 4 டிஎம்சி தண்ணீர் வழங்குவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சேதமடைந்துள்ள பூண்டி – கண்டலேறு கால்வாய் சீரமைப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் சீனிவாசன் நிழல்.இன் – 8939476777
