Sat. Oct 24th, 2020

சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்தில், ஆறாக ஓடும் கழிவுநீர்…

1 min read

மாதவரம் மண்டலம், 26 வது வார்டில் சக்திவேல் நகர், பாரதி நகர், சாஸ்திரி நகர், மாகாவீர் நகர், உள்ளிட்ட 10திற்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன.
இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டு சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த திட்டம் முறையாக செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பல இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் தெருக்களில் ஆறாக ஓடுகிறது. இதனை தொடர்ந்து சாஸ்திரி நகர் பிரதான சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கின்றனர்்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் இதுநாள்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாஸ்திரி நகர் பிரதான சாலையில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கழிவுநீர் அடைப்பை சரி செய்யாத மாதவரம் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் வீடுகளுக்கு குடிநீர் இனைப்பு சாக்கடை இணைப்பு போன்றவைகளுக்கு முறையாக பணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யுமாறு உதவி பொறியாளர் பிரபுவிடம் போன் செய்து புகார் தெரிவித்தால் முடியாது என்று மறுப்பதோடு பெண்கள் என்றும் பாராமல் தரக்குறைவாக பேசுகிறார் பல சமயங்களில் கழிவு நீருடன் குடிநீர் கலந்து வருகிறது இதனால் நாங்கள் அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் தவணை முறையில் இணைப்புக்கான கட்டணம் செலுத்தும் முதல்வர் அறிவித்த திட்டமான அழைத்தால் இணைப்பு என்று அரசின் திட்டத்திற்கு அதிகாரிகள் முழுமையாக பணம் கட்டினால் தான் இணைப்பு கொடுக்க முடியும் என்றும் மறுக்கின்றனர்.எனவே தேங்கியுள்ள கழிவுநீரை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் பெண்களை தரக்குறைவாக பேசும் உதவி பொறியாளர் பிரபுவை இடமாற்றம் செய்ய வேண்டும் இவ்வாறு தெரிவித்தனர்.

மாதவரம், செய்தியாளர் – ரஞ்சித்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *