Mon. Oct 19th, 2020

சோழவரம் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி திமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…

1 min read

தெற்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி திமுக சார்பில், உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி சோழவரம் லட்சுமி மகாலில் சோழவரம் தெற்கு ஒன்றியச் செயலாளரும் சோழவரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவருமான மீ.வே. கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

சோழவரம் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் என்.முகமது அலி, துணை அமைப்பாளர்கள் எம்.ஜெகன், ஆர்.விமல்குமார் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன், சோழவரம் ஒன்றிய அவைத்தலைவர் ஏ.காசிம் முகம்மது, ஒன்றிய துணைச் செயலாளர்கள் இரா.விஜயன், ப.சீனிவாசன், கி.வீரம்மாள், பொருளாளர் டி.ராஜி, மாவட்டப் பிரதிநிதிகள் வி.முருகப்பிள்ளை, ஜி.சுப்பிரமணியம், கே.எம்.துரைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு. நாசர், மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆகியோர் உறுப்பினர் அட்டையை வழங்கி சிறப்புரையாற்றினர்.
ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஆத்தூர் ஜி.ஆர். பத்மநாபன், ஆர்.குமரன், காரனோடை என்.விஜய் ஆகியோர் நன்றி கூறினர்.
இதில், மாவட்ட கவுன்சிலர் கீதா அரசு, ஒன்றியக் கவுன்சிலர் கா.மகேந்திரன், டி.ரேவதி துரைவேல், வி.சந்திரா வாசுதேவன், சுகவேணி முருகன், தீபா நாகராஜ் மற்றும் ஒன்றிய, ஊராட்சி கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், “எல்லோரும் நம்முடன்” என்ற இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் பாடியநல்லூர் ஊராட்சி மொண்டியம்மன் நகர் மார்க்கெட் அருகே, சோழவரம் தெற்கு ஒன்றியச் செயலாளரும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவருமான மீ.வே. கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. அதில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு. நாசர், மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு “எல்லோரும் நம்முடன்” இணைய வழி உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்து உறுப்பினர் அட்டையை வழங்கினர்.
அதில், மாவட்ட கவுன்சிலர் கீதா அரசு, ஒன்றியக் கவுன்சிலர் கா.மகேந்திரன், டி.ரேவதி துரைவேல், வி.சந்திரா வாசுதேவன் மற்றும் ஒன்றிய, ஊராட்சி கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தொண்டரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ரெட்டில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *