மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில், கொரோனா தொற்று பரிசோதனை முகாம் நடத்தபட்டது…
1 min read
கொரோனா தொற்று பரவாமல் இருக்க காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்கள் உள்ளனவா என்றும், கொரோனா தொற்று பரிசோதனை முகாம் அனுப்பம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்வேணி அப்பவு கோரிக்கையை ஏற்று நடத்தப்பட்டது.

முகாமை, மீஞ்சூர் ஒன்றிய ஆனையர் ராஜேந்திரபாபு துவக்கி வைத்தார். அப்போது அனுப்பம்பட்டு கூட்டுறவு கடன் சங்க தலைவர் உமாமகேஸ்வரன், ஊராட்சிமன்ற துணை தலைவர் மனோன்மணி, இயக்குனர் ராமநாதன், ஊராட்சி செயலாளர் செந்தில், வார்டு உறுப்பினர்கள், கார்த்திக், சுகாதார ஊக்குனர் தாட்சாயிணி, ஊராட்சி அலுவக உதவியாளர் சகுந்தலா, ஆனஸ்ட்ராஜ், சந்துரு ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சிறப்பு மருத்துவ முகாம், மருத்துவர் சண்முகபிரியா தலைமையில், மருந்தாளுனர் நேதாஜி, ஆய்வுபணியாளர் தங்கம், சுகாதார ஆய்வாளர் ஏழுமலை, கிராம சுகாதார செவிலியர் ஜெகிந்தா, பகுதி சுகாதார செவிலியர் கலைசெல்வி, கொசு ஒழிப்பு பணியாளர்கள் ரஞ்சித், மணி, மற்றும் மதன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசோதனை முகாமை நடத்தினர்.
செய்தியாளர் – பூர்ணவிஷ்வா நிழல். இன் – 8939476777
