மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில், பனைவிதைகள் நடப்பட்டது…
1 min read
மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள நீர்நிலைகளில் 3000 பனைவிதைகள் விதைக்க வேண்டி, ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணவேணி அப்பாவு அவர்கள் முயற்சிகள் மேற்கொண்டார். அதன்படி, முதல் முயற்சியாக இன்று 1000 பனைவிதைகளை அனுப்பம்பட்டு மடுவு, செல்லியம்மன் கோயில் குளம் போன்ற நீர்நிலைகளில் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அனுப்பம்பட்டு கூட்டுறவு கடன் சங்க தலைவர் உமாமகேஸ்வரன் கலந்து கொண்டு பனைவிதைகள் விதைக்கும் பணியை துவக்கி வைத்தார். அப்போது அவருடன் துணை தலைவர் மனோமணி , பசுமைபூமி அமைப்பின் நிர்வாகி, பசுமை நாராயணன், சமூக ஆர்வலர்கள், சீனிவாசன், தமிழ்புவனா, ஆகியோரும், ஊராட்சி செயலாளர் செந்தில், இயக்குனர் ராமநாதன், கார்த்திக், அய்யப்பன், தமிழ், அமுல், சுதாகர், முனுசாமி, ரவி, பாபு, ஆனஸ்ட்ராஜ், சந்துரு, ஊராட்சி அலுவலக பணியாளர், சகுந்தலா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர்கள், மலர்கொடி, தாட்சாயிணி, சுமதி, விஜயா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777
