Sat. Oct 24th, 2020

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம்…

1 min read

மாவட்டம் பொன்னேரி பேரூராட்சியில் பல ஆண்டுகால கோரிக்கையான பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தினை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாதாள சாக்கடை திட்டத்தினை அறிவித்தார். அதன்பிறகு பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. பணிகள் விரைவாக வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன் பணிகள் நிறைவடைய முடக்கிவிடும் பொருட்டு, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் அரசு துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். இப்பணிகளை எவ்வாறு வேகமாக செய்து நிறைவடைய செய்வது என்பது குறித்து, பேரூராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து,
சில முடிவுகள் எடுக்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன், பொன்னேரி பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பானுபிரசாத், உபயதுல்லா, பொன்னுத்துரை, கோளூர் கோதண்டன், பா.சங்கர்,வெற்றிவேல் ராமலிங்கம், செல்வகுமார், எஸ்.பி.அருள்,சலீம், நாகராஜ்,சம்பத்,ஸ்ரீதர் சௌகத்அலி, கொண்டகரை அமிர்தலிங்கம், மீஞ்சூர் மாரி, வாசு, வல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூரணவிஸ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *