திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வள்ளுவர் நகர் குடியிருப்பில், விழா மேடை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், வள்ளுவர் நகர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள மக்களுக்காக விழா மேடை ஒன்றை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம் பலராமன் அவர்கள் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டிக் கொடுத்தார்.

அதற்கான துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழா மேடையில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மேடையிலேயே தலா, இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.
சட்டமன்ற உறுப்பினர் பலராமன் அவர்களுக்கு முன்னதாக உற்சாக வரவேற்பு கொடுத்த குடியிருப்பு பகுதி மக்கள் கவிதை நயம் மிகுதியுடன் விழாவை நடத்தினர். அந் நிகழ்ச்சியில், வள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதி நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777
