திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில், பொன்னேரியில்ஆன்லைன் உறுப்பினர் சேர்ப்பு முகாம்…
1 min read
திமுக சார்பில், அக் கட்சிக்கு ஆன்லைன் மூலம், உறுப்பினர் சேர்ப்பு முகாம், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இடங்களில் நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பகுதியில் ஆன்லைன் உறுப்பினர் சேர்ப்பு முகாம் “எல்லோரும் நம்முடன்” என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், மாணவர்கள் திரளாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார்கள். அவர்களுக்கு, அதில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கி.வேணு கலந்து கொண்டு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாநில இளைஞரணி துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல், மாவட்ட மீஞ்சூர் அவைத்தலைவர் பகலவன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் சுந்தரம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி. உமாமகேஷ்வரி மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, மாவட்ட துணை செயலாளர்கள் கோளூர் கதிரவன், டாக்டர் பரிமளம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன், துணை அமைப்பாளர் ஞாயறு ஆனந்த் குமார், மாவட்ட பிரதிநிதி தமிழரசன், பாளையம், ஒன்றிய அவைதலைவர் கா.சு.தன்சிங், ஒன்றிய கவுன்சிலர்கள் சகாதேவன், கதிரவன், மற்றும் திமுக உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..
செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777
