செங்குன்றம் இளைஞர் அணி சார்பாக, உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி…
1 min read
தி. மு. க. இளைஞர் அணி சார்பாக உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் இணைய வழி மூலம் உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, செங்குன்றம்
பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெ.ஜெய்மதன், முன்னாள் துணைத்தலைவர் இரா. ஏ. பாபு, மாவட்டப் பிரதிநிதி ஏ.திராவிட மணி, ஒன்றிய துணைச் செயலாளர் ஆர்.டி. குமார், நகர அவைத் தலைவர் ஜெ.ரகுகுமார், துணைச் செயலாளர்கள் ஆர்.சீனிவாசன், டி.அருள்தேவநேசன், எஸ்.முனீஸ்வரி சுகுமார், பொருளாளர் என்.சந்திரசேகர், ஒன்றிய பிரதிநிதிகள் ஏ.கோபால், கே.சுந்தரம், பி.செல்வம், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜெ.செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி. சா. மு. நாசர், மாதவரம் எம்.எல்ஏ. சுதர்சனம் ஆகியோர் அடையாள அட்டை வழங்கினர்.
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன், துணை அமைப்பாளர் நரேஷ் குமார், ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளரும் துணைப் பெருந்தலைவருமான மீ.வே.கருணாகரன், பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், புழல் துணை பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர் மற்றும் எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரன், கா.கு. இலக்கியன், மோகன் குமார், முனுசாமி, எட்வர்ட், முன்னாள் கவுன்சிலர்கள் கே.கே.ராமன், டி.செல்வம், என்.சகாதேவன், லோகேஷ், பாலசுப்ரமணியம், சங்கர், காந்தன், அப்துல் காதர், வெங்கடேசன், கோபால், பூபதி, சுரேஷ், சூரிய நாராயணன், பிரேம் குமார், திருமலை, அருள் ராஜ், மதிவாணன், காஜா மொய்தீன், சந்துரு, திருஞானம், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்குன்றம் இளைஞர் அணி அமைப்பாளர் கே.எல்.என்.லெனின்குமார், துணை அமைப்பாளர்கள் ஜெ.ஆர். கார்த்திக், மு.ஈஸ்வரன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
செய்தியாளர் – ரெட்டில்ஸ் நண்பன் – அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
