Sat. Oct 24th, 2020

மீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்கள் விழிப்புணர்வு குறித்து, டி.எஸ்.பி கலந்துரையாடல்…

1 min read

மீஞ்சூர் அருகே உள்ள அனுப்பம்பட்டு கிராமத்தில், பெண்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணவேணி அப்பாவு அவர்கள் தலைமை தாங்கினார். அனுப்பம்பட்டு கூட்டுறவு கடன் சங்க தலைவர் உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, பொன்னேரி சரக துணை கண்காணிப்பாளர் கல்பணா தத், அவர்கள் கிராம பெண்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், ” பெண்கள் அனைவரும் பாலியல் குறித்த பிரட்சனைகளில், விழிப்புடன் இருக்க வேண்டும், யாருக்கு எந்த பிரட்சனை என்றாலும் உடனே காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும், உங்கள் வீட்டு குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு கொடுங்கள், அவர்களிடம் நட்பாக பழகுங்கள், 18 வயதுக்கு குறைவான பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் பெற்றோர்களும் குற்றவாளிகள் ஆவார்கள்,” என பெண்களுக்கு அறிவுரை கருத்துக்களை கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ” இந்த பகுதி ஏற்கனவே காவல் துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளது, உங்கள் கிராமங்களில் யாரேனும், தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ அது பற்றியும் நீங்களே, எனக்கு நேரடியாக தகவல் கொடுக்கலாம், உங்கள் குடும்பத்தில் யாராவது போதை பொருட்களுக்கு அடிமையாக இருந்தால், காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தால், சம்மந்தபட்ட நபர்களுக்கு, மனநல ஆலோசகர்களை கொண்டு அறிவுரைகள் வழங்கப்படும். அவர்கள் திருந்தி வாழ நினைத்தால் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்க்கு தேவையான வேலை வாய்ப்புகளும் உருவாக்கி கொடுக்கப்படும்,” என உரையாற்றினார்.

பின்னர், செல்லியம்மன் கோயில் குளத்தின் கரையில், பனைவிதைகளை நட்டார். இந் நிகழ்ச்சியில், மேலும் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி அவர்களும், அனுப்பம்பட்டு கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் ராமநாதன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *