Fri. Oct 23rd, 2020

செங்குன்றத்தில், ஆதரவறோர் இல்லத்தில், மதிய உணவு, நலத்திட்ட உதவிகள்…

1 min read

பேரூராட்சியின் முன்னாள் தலைவரும் திமுக கட்சியின் முன்னாள் மாவட்ட அவைத்தலைவருமான என்.எம். துரைசாமி நினைவேந்தல் நிகழ்ச்சியும், அரிமா சங்க முன்னாள் தலைவர் டி.இளங்கோவின் பிறந்தநாளை முன்னிட்டும், சோழவரத்தில் அமைந்துள்ள ஸ்ரீராமகிருஷ்ணா ஆத்மலாயம், ஸ்ரீசாரதா ஆதரவற்றோர் ஆசிரமத்தில் மதிய உணவும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

இதில் செங்குன்றம் பேரூர் கழக திமுக செயலாளரும் பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஜி.ராஜேந்திரன், லயன்ஸ் சங்க இரண்டாம் துணை ஆளுநர் பி.வி.ரவீந்திரன், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவரும் சென்னை செங்குன்றம் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவருமான இரா.ஏ.பாபு, செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் – நெல் அரிசி வணிகர்கள் சங்கத் தலைவர் டி.கோபி, மண்டலத் தலைவர் ஜி.வடிவேலன்,

சென்னை – செங்குன்றம் லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.பொன்னையன், செயலாளர் டி.பவானி சங்கர், பொருளாளர் கே.பாஸ்கர், ஆசிரம நிர்வாகி முத்து விசாலாட்சி, டாக்டர் கோபால், அப்துல் வகாப், சங்கர், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு என்.எம். துரைசாமி அவர்களின் நினைவாக ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் லயன் உறுப்பினர்களும் முக்கிய பிரமுகர்களும் திரளாக கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர் – ரெட்டில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *