Fri. Oct 23rd, 2020

செங்குன்றம் அலமாதியில், 1 கோடி மதிப்பிலான இடத்தை வருவாய் துறை அதிகாரிகள் மீட்பு…

1 min read

செங்குன்றம் அடுத்த அலமாதி ஊராட்சிக்குட்பட்ட அலமாதி கிராமம், விஜயலட்சுமி நகர், அண்ணா நகர், வேட்டைக்காரன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு அலமாதி முந்திரிதோப்பில் சுமார் 3 ஏக்கர் பரப்பில் சுடுகாடு – இடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை சமூக விரோதிகள் சிலர் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தை சுத்தம் செய்து வீட்டு மனைகளாக பிரித்து கற்களை நட்டு வைத்து இருந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், ஆக்கரமிப்பை அகற்ற மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்படி, பொன்னேரி கோட்டாட்சியர் வித்யா, வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் ஆலோசனையின் பேரில், சோழவரம் வருவாய்த்துறை ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர்கள் முருகேசன், சீனிவாசன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்து நடப்பட்டிருந்த கற்களை அகற்றி இடத்தை மீட்டெடுத்தனர். இந்த இடத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடி என கூறப்படுகிறது.
புகாரின் , உடனடியாக ஆக்கிரமிப்பை மீட்டெடுத்த வருவாய் துறை அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

செய்தியாளர் – ரெட்டில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

அதே போல் ஆத்தூர் கிராமத்தில், கலாங்குத்து புறம்போக்கு நிலத்தை அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ஆகரமிப்பு செய்து வீடுகட்ட முயன்ற போது, ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் தலையிட்டு பணியை செய்யவிடாமல் தடுத்ததுடன், இந்த ஆக்ரமிப்பு குறித்து சோழவரம் போலிசில், ஆக்ரமிப்பு செய்த விஜயகுமார் மீது புகார் மனு ஒன்றை வழங்கினார். இது குறித்து சோழவரம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *