பொன்னேரியில், ஒருங்கிணைந்த சட்ட நல அறக்கட்டளை சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஆட்டோ சேவை…
1 min readதிருவள்ளுர் மாவட்டம்,பொன்னேரியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட ஒருங்கிணைந்த சட்ட நல அறக்கட்டளை சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஆட்டோ சேவை திட்டத்தின் தொடக்க விழா பொன்னேரி அண்ணா சிலை அருகே நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாசிலை அருகே இயங்கி வரும் ஆட்டோ சங்கத்தில் இயங்குகின்ற 40 ஆட்டோக்கள் இலவசமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவும் சேவையை புரிந்திட இந்த அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கர்ப்பிணி பெண்கள் சென்று வரும் அதற்கான செலவை அறக்கட்டளையே ஏற்றுக்கொண்டு அதற்கான தொகையை ஆட்டோ ஓட்டுனர்களிடம் கொடுத்து விடுகின்றனர். இந்த சேவைக்கான திட்டத்தின் துவக்க விழா நிறுவனத் தலைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த சேவைகளில் இணைக்கப்படுள்ள ஆட்டோக்களில் ஒரு அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும், அந்த திட்டத்தில் இணைந்து கொண்ட ஆட்டோக்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. பொன்னேரியில் உள்ள வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இந்த அமைப்பின் சார்பில், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்சியில் மாநில,மாவட்ட, நகர,ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777
