January 20, 2021

விளாங்காடுபாக்கம் முதல் நிலை ஊராட்சியில், பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது…

1 min read

விளாங்காடுபாக்கம் முதல் நிலை ஊராட்சியுடன், மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளை இணைந்து பனை விதை விதைக்கும், மற்றும் வழங்கும் நிகழ்ச்சி விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்ற வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ச.பாரதி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, புழல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழ்தமன்னன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி, விளாங்காடுபாக்கம் ஊராட்சி கழக திமுக செயலாளர் வழக்கறிஞர் பெ.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளை தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (TUJ) மாநில துணைத்தலைவருமான ஜி.பாலகிருஷ்ணன் பனை விதையின் அவசியத்தையும், பனையினால் கிடைக்கக் கூடிய நன்மைகளையும் மக்களிடையே எடுத்துரைத்தார். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (TUJ) மாநில செயற்குழு உறுப்பினரும் ரெட்ஹில்ஸ் நண்பன் இதழின் ஆசிரியருமான நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் வரவேற்புரையாற்றினார்.

ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகரும், அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் தலைமை வழிகாட்டியுமான வெ.பொன்ராஜ், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், தேசிய நவீன நீர் வழிச்சாலை திட்டம், நீர் மேலாண்மை உயர் மட்ட திட்ட ஆலோசகருமான தனுவேல்ராஜ் முத்துகாத்தன், சென்னை – செங்குன்றம் லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் இரா.ஏ.பாபு ஆகியோர் பனை விதையை வழங்கியும், நட்டு வைத்தும், உரையாற்றினர்.

வெ.பொன்ராஜ் அவர்கள் உரையாற்றும் போது, ஐயா அப்துல்கலாம் கூறியவற்றில் முக்கியமானதான பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் நாம் வாழ்கின்ற வாழ்க்கை சரித்திரமாக திகழ வேண்டும் என்ற சொல்லுக்கேற்ப சமூகத்துக்கு நம்மால் முடிந்தவற்றை செயல்படுத்தி நாடும், மக்களும் செழிப்பாக வாழ வழி செய்ய வேண்டுமென்றும், நம் குழந்தைகளை சமூகத்தை நல்ல காரியங்களை செய்வதற்கும், பனை மரங்களை வளர்த்து அதன் மூலம் பல்வேறு வகைகளில் பணம் ஈட்டுவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்றும், இந்த பனையை நீங்கள் வளர்த்தால், அரசு உங்களுக்கு பென்சன் தருகிறதோ இல்லையோ, நீங்கள் வளர்க்கும் பனை உங்களுக்கு 12 வருடம் கழித்து கண்டிப்பாக அதைவிட கூடுதலாக பென்சன் வழங்கும் என்று கூறினார்.

ஊராட்சி மன்றத் தலைவர் ச.பாரதி சரவணன் அவர்கள் உரையாற்றும் போது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் பனை விதை நடும் நிகழ்ச்சி எங்கள் ஊருக்கு முதலாக வாய்ப்பு கிடைத்துள்ளது. நானும், ஊராட்சி மக்களும் இணைந்து இந்த ஊரைச் சுற்றி பனை மரங்களை வளர்த்து அதன் மூலம் தொழிலை உருவாக்கி ஊர் செழிப்பாக்கிட அனைத்து முயற்சி மேற்கொள்வோம் என்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், உடற்பயிற்சி ஆசிரியர் வேல்முருகன், விளாங்காடுபாக்கம் முதல் நிலை ஊராட்சி துணைத்தவைவர் ந.கலாவதி நந்தகுமார், அழிஞ்சிவாக்கம் வழக்கறிஞர் ஆர்.செல்வமணி, மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளை இயக்குநர்கள், ஏ.உமாமகேஸ்வரன், பி.ஜி. போத்தி, எஸ்.கார்த்திக், பி.லெனின் லோகேஷ், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ந.ஆனந்தி நாகராஜன், தர்மி ரவி, ஏ.மாரி, அருணா தேவி சீனு, என்.மாரியம்மாள் நரசிம்மன், கே.சத்தியசீலன், நிலவழகி முத்து, ரதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சமூக பணிக்குழு நண்பர்கள் குழு செயலாளர் சமீர் நன்றி கூறினார்.

செய்தியாளர் – ரெட்டில்ஸ் நண்பன், அபுபக்கர் நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *