கும்மிடிப்பூண்டியில், வேளாண் துறை சட்டத்தை எதிர்த்து திமுக அனைத்து கட்சி ஆர்பாட்டம்…
1 min read
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து திமுக தலைமை உத்தரவின் பேரில், கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கி.வேணு தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினரும், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் வரவேற்றார்.

இந்த ஆர்பாட்டத்தில் திமுக சார்பில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை அமைப்பாளர் சி.எச்.சேகர், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், நகர செயலாளர் அறிவழகன், காங்கிரஸ் சார்பில் மகிளா காங்கிரஸ் மாநில தலைவி டி.கே.வி.சுதா,மாவட்ட தலைவர் ஏ.சி.சிதம்பரம், துணை தலைவர் சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துளசி நாராயணன், ராஜேந்திரன், சூர்யபிரகாஷ், வி.ஆர்.லட்சுமணன், சி.ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேசகுமார், புலியூர் ஆனந்தன், சம்பத், சண்முகமணி, மதிமுக சார்பில் மாவட்ட அவை தலைவர் நெமிலி பாபு, டி.ரவிக்குமார்,எம்.பாபு, மதிவாணன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகி சாதிக் பாட்ஷா, ஒளிமுகம்மது, ஜாபர்அலி, இலியாஸ், திராவிடர் கழகம் சார்பில் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில்
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டன கோஷம் எழுப்பி மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளை பெரிதும் கஷ்டப்படுத்தும் என கூறி வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தினர். திமுக தலைமை கழக பேச்சாளர் தமிழ்சாதிக், ஒன்றிய துணை செயலாளர்கள் திருமலை, பாஸ்கரன், மாவட்ட விவசாய பிரிவு அமைப்பாளர் மணி, ஒன்றிய கவுன்சிலர்கள் அமலா சரவணன், ஜோதி, சிட்டிபாபு, ஜெயந்தி கெஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777
