செங்குன்றத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
1 min read
புழல் ஒன்றிய, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் திருவள்ளூர் மத்திய மாவட்டம் புழல் ஒன்றியம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர்கள் இணையும் விழா புழல் ஒன்றிய செயலாளர் அன்புராஜன் தலைமையில் நடைபெற்றது.

புழல் ஒன்றிய துணை செயலாளர் ராஜி அனைவரையும் வரவேற்றார். மாதவரம் தொகுதி பொது குழு உறுப்பினர் கே.அந்தோணி, மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட இணை செயலாளர் சாமுண்டீஸ்வரி, மாவட்ட துணை செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட பொருலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக மாநில ஓட்டுநர் அணி செயலாளர் குட்வில் கே.குமார், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் எஸ்.வேதாசலம் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிகளை குறித்து பல்வேறு ஆலோசனைகளை கூறி சிறப்புரையாற்றினர்.

மாற்றுக் கட்சியிலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்டோர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்.
இதனை தொடர்ந்து கழகத்தில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர். இதில் புழல் ஒன்றிய அவைத்தலைவர் மகேந்திரன், இணை செயலாளர் பிரபாகரன், துணை செயலாளர் குணசுந்தரி, பொருளாளர் விமல்குமார், மாவட்ட பிரதிநிதிகள் முகமது உசேன், சுந்தர், ரூபாவதி மற்றும் ஊராட்சி செயாலாளர்கள் சுந்தரமூர்த்தி, ராஜ்குமார், கார்த்திக், பிரவின், கபில் உட்பட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் – ரெட்டில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
