செங்குன்றம் பகுதியில், கொரோனா கால சேவை புரிந்த, சமூக சேவகர் எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரனுக்கு சாதனையாளர் விருது…
1 min read
உலக செம்மொழி தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில், பல்வேறு துறைகளில் சிறந்து சேவையாற்றிய சாதனையாளர்களுக்கு மதிப்புறு முனைவர் (டாக்டர்) பட்டம் – மற்றம் சாதனையாளர் விருது, நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

செங்குன்றம் கமராஜர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் கோட்டீஸ்வரன் இவர், கொரோனா பேரிடர் காலங்களில் தான் வசிக்கும் பகுதி மற்றும்,செங்குன்றம் முழுவதும் மட்டுமில்லாமல், வெளிமாநிலங்களில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கால்நடையாக வெளியேறிய வடமாநிலத்தவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்து இரவு, பகலும் அயராது பணியற்றினார்.

மேலும், வெளிமாநிலத்தவர்கள் அனைவரும் தங்களுடைய ஊருக்கு திரும்ப செல்லும் வரை அனைத்து விதமான உதவிகளையும் செய்த சேவையைப் பாராட்டியும், பல்வேறு சமூகப் பணிகளில் கலந்து கொண்டு ஏழை, எளிய நலிந்த மக்களுக்கும், பொதுமக்களுக்கும் பயன்தரும் வகையில் பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்த சமூக சேவகர் எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரனுக்கு நீதிபதி என்.வைத்தியநாதன், நீதிபதி கே.வெங்கடேசன், டிராபிக் ராமசாமி, மற்றும் திரைப்பட பாடலாசிரியர் ஜி.சுதந்தரதாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, சிறந்த சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தனர்.
செய்தியாளர் – ரெட்டில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
