Fri. Oct 23rd, 2020

திருவள்ளுரில், மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து, திமுக, அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்…

1 min read

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று திருவள்ளூர் நகரில் மீரா திரையரங்கம் அருகில், விவசாயிகள் வகையில் மூன்று மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனை எதிர்த்து தி மு கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில், திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் காங்கிரஸ் பேரியக்கத்தின் நகர தலைவர் சிபி மோகன்தாஸ் மற்றும் ஜேபி அருள்மொழி வழக்கறிஞர் ஜான் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பூண்டி இளவரசு மதிமுக சார்பில் வேலு இடதுசாரிகளின் கட்சிகள் சார்பில் கஜேந்திரன் லோகநாதன் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ரசித் இந்திய யூனியன் லீக் முஸ்லிம்கள் லீக் கட்சியின் நிர்வாகிகள் முஸ்லிம்கள் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *