புழல் ஒன்றியம், தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா டேவிட்சனுக்கு, டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது…
1 min read
உலக செம்மொழி தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு மதிப்புறு முனைவர் (டாக்டர்) பட்டம் – சாதனையாளர் விருது மற்றும் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்வு வடபழனியில் நடைபெற்றது.

உலக செம்மொழி தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்திய சேவையாளர் முனைவர் மு.ஜப்பார் வரவேற்புரையாற்றினர். சமூக சேவகர் டாக்டர் டிராபிக் ராமசாமி தலைமை தாங்கினார். உலக செம்மொழி தமிழ்ப் பல்கலைக்கழகம் இயக்குநர் டாக்டர் கோ.தனராஜ் முன்னிலை வகித்தார். நீதிபதி என்.வைத்தியநாதன், நீதிபதி கே.வெங்கடேசன், ஆகியோர் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தமைக்காகவும் சமூக சேவைக்காகவும் தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதா டேவிட்சனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தனர். இதில் பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் – ரெட்டில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
