January 19, 2021

பூந்தமல்லியில், மத்திய, மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

1 min read

விவசாயிகள் நலனுக்கு எதிராக மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர் தேசிங் ஏற்பாட்டில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் P . ஜேம்ஸ் முன்னிலையில், செயல் தலைவரும், திருவள்ளூர் எம்.பியுமான ஜெயக்குமார் தலைமையில் பூந்தமல்லி, வெள்ளவேடு பகுதியில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்தும், நெற்கதிர்களை கையில் ஏந்தியும், திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள், விவாசாயிகள் மற்றும் பொதுமக்கள், மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

செய்தியாளர் – ரெட்டில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *