Mon. Oct 19th, 2020

கும்மிடிப்பூண்டி சிறுப்புழல் பேட்டை ஊராட்சியில், தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழா நடைபெற்றது…

1 min read

மன்ற தலைவர் எம்.சுசீலாகும்மிடிப்பூண்டி சிறுப்புழல் பேட்டை ஊராட்சியில், தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழா ஊராட்சிமன்ற தலைவர் சுசிலாமூர்த்தி ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு, கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம். எஸ்.சிவகுமார் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் ரவிக்குமார் துணை வட்டார வளர்ச்சி மண்டல அலுவலர் ருத்ரமூர்த்தி கலந்துகொண்டனர். தொடர்ந்து கிராம வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஞானமணி கிராம நிர்வாக அலுவலர் கவிதா முன்னிலை வகித்தனர்.

வருடந்தோறும் செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேசிய ஊட்டசத்து மாத விழாவினை போஷான் மா நிகழ்ச்சியை நிறைவு செய்யும் விதமாக நிகழ்ச்சியில், கர்ப்பிணி தாய்மார்கள் பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகள் என அனைவரும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஊட்டச்சத்து அதனைப்பற்றி மருத்துவர் மற்றும் ஒன்றிய குழு தலைவரும் எடுத்துரைத்தனர். பின்னர் அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஊட்டச்சத்து மாதத்தின் முக்கிய நோக்கமான ஊட்டச்சத்து நிறைந்த உணவு செடிகள் முருங்கை பப்பாளி கொய்யா கருவேப்பிலை சுண்டைக்காய் என ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் பள்ளி வளாகத்தில் ஒன்றியக்குழு தலைவர் ஒன்றியக்குழு கவுன்சிலர் ஊராட்சி செயலாளர் வட்டார மருத்துவ அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரால் நடப்பட்டது.

செய்திகள் – யாகோப்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *