செங்குன்றத்தில், கொரோனா காலத்தில் சேவை செய்தவர்களுக்கு வருவாய் துறை சார்பாக, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் செங்குன்றம் குறுவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்புப் பணி மற்றும் வெளிமாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் பணியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையுடன் இணைந்து பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் தலைமை தாங்கினார். செங்குன்றம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெய்கர் பிரபு வரவேற்புரையாற்றினார். கிராம நிர்வாக அலுவலர்கள் ரவீந்திரன், பரக்கத் ஹுசைன், எஸ்தர், சேகர், அன்னலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் அரிசி வணிகர்கள் சங்கம் சார்பாக தலைவர் டி.கோபி, செங்குன்றம் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பாக எம்.ஜெயபால், மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளை இயக்குனர் எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரன், செங்குன்றம் லயன்ஸ் சங்கம், மிசா ஏழுமலை அறக்கட்டளை சார்பாக இரா.ஏ.பாபு,


அம்ரத் ஜூவல்லரி ரமேஷ், செங்குன்றம் நெல் இடைத்தரகர்கள் சங்கம் சார்பாக பி.நந்தகுமார், சமூக பணிக்குழு நண்பர்கள் சார்பாக இ.பாலாஜி, சமீர், சமூக சேவகர் வழக்கறிஞர் குசல்குமார், சுந்தர், அலீ உசேன் ஆகியோர் கொரோனா நோய் தடுப்புப் பணியில் வருவாய்த் துறையுடன் இணைந்து பணியாற்றியமைக்காக நற்சான்றிதழை வழங்கி கௌரவித்தனர்.
செய்தியாளர் – ரெட்டில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
