Mon. Oct 19th, 2020

பூந்தமல்லி தொகுதியில், கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார்…

1 min read

மாவட்டம் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காட்டுபாக்கம், கண்ணபாளையம், பாணவேடுதோட்டம், கோளப்பன்சேரி, காவல்சேரி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் கட்டிட பணிகளையும், சுகாதார பணிகளையும், மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி பார்வையிட்டார்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி கொண்டிருந்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொது மக்கள் தரப்பில் பலர் கோரிக்கை மனுக்களையும் வழங்கினர்.

பூவிருந்தவல்லி ஒன்றிய திமுக செயலாளர் பூவிருந்தவல்லி ஒன்றிய குழு பெருந்தலைவர் பூவை.M.ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஒன்றிய குழு துணைதலைவர், மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *