இன்று கோயில்களில் சிறப்பு பூஜை செய்தார் ஒ.பி.எஸ், தர்மயுத்தம் துவங்க போகிறாரா…
1 min read
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எந்த ஒரு வேலை செய்வதற்க்கு முன்பும், ஏதாவது ஒரு கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தி விட்டு பிறகு தான் அந்த வேலையை செய்வார்.


அதே போலவே அதிமுகவில் பெரும்பாலானவர்கள் நடந்து கொள்வதை நாம் பார்க்கலாம், தற்போது அந்த கட்சியின் ஒருங்கினைபாளராகவும், துணை முதல்வராகவும் உள்ள ஒ.பி.எஸ் அவர்களும் அதே வழியை கடைபிடிப்பவர் தான். இன்று இரவு 7.30 மணிக்கு மேல் அவர் பொன்னேரி அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலுக்கும், பெரியபாளையத்தில் உள்ள பவானியம்மன் கோயிலுக்கும் வந்திருந்தார்.


அவர் அதிகம் கோயில்களுக்கு செல்ல கூடியவர் என்றாலும், இன்று உள்ள அரசியல் சூழலில் அவர் இந்த கோயிகளுக்கு வந்தது ஒரு முக்கியதுவத்தை பெறுகிறது. அவர் முதலில் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வந்த போது, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான சிறுனியம் பலராமன், மற்றும் , பரிமேலழகர், எல்லாபுரம் ரவிசந்திரன், பானுபிரசாத், கார்மேகம், மகேந்திரன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் வந்திருந்து வரவேற்று இரண்டு கோயிகளுக்கும் அழைத்து சென்று சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டனர்.
செய்தியாளர் – சீனிவாசன், பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777
