பொன்னேரி அடுத்த மாங்கோடு பகுதியில், மானியவிலை டீசல் பங்க் அமைக்க, சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பெரிய மாங்கோடு குப்பத்தில் அரசு மீன்வளத் துறை சார்பில், மீனவர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்க புதிய டீசல் பங்க் அமைக்க அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்ததுடன் அடிக்கலையும் நாட்டினார். சின்ன மாங்கோடு குப்பம், பெரிய மாங்கோடு குப்பம், புதுக்குப்பம், பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் பகுதியில் மானியவிலையில் டீசல் பங்க் அமைத்ததற்கு ஏற்கனவே பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிருனியம் பலராமன் அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்படி, அவருடைய தீவிர முயற்ச்சியில் இப்பகுதியில் மானியவிலை டீசல் பங்க் அமைத்து கொடுத்ததற்க்கு, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம் பலராமன் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இதனால் தங்களின் வாழ்வாதாரம் மேன்மையடையும் என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மீனவரணி செயலாளர் மோகன், மீன்வளத்துறை அதிகாரிகள், மாவட்ட அதிமுக மீனவர் பிரிவு நிர்வாகிகள், வருவாய் துறை அதிகாரிகள் ,அரசு அதிகாரிகள், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிழல்.இன் – 8939476777
