Mon. Oct 19th, 2020

புழல் ஏரியில், எலைட் பள்ளி குழுமம் சார்பாக, பனை விதை நடவு திருவிழா…

1 min read

எலைட் பள்ளிக் குழுமம், காக்கை அறக்கட்டளை, மக்கள் பாதை மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து பனை விதை நடவுத் திருவிழாவை செங்குன்றம் – புழல் ஏரி மதகு அருகில் நடத்தினர். எலைட் பள்ளி குழுமத்தின் தாளாளர் ஞானப்பிரகாசம் தலைமை தாங்கினார்.


காக்கை அறக்கட்டளையின் நிர்வாகி மணிகண்டன், மக்கள் பாதை திருவள்ளூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், எலைட் பள்ளி குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பால் செபாஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிய கண்டத்திலேயே ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர் என்ற விருது பெற்ற அய்யா,
“பாலம் கல்யாணம் சுந்தரம்” அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பனை விதையை நடவு செய்து துவக்கி வைத்தார்.

செங்குன்றம் எம்4 காவல் நிலைய ஆய்வாளர் ஜவஹர் பீட்டர், செங்குன்றம் – புழல் ஏரி நடைபயிற்சி சங்கத்தின் தலைவரும் சென்னை செங்குன்றம் லயன்ஸ் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான இரா.ஏ.பாபு ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பனை விதை நட்டு வைத்தனர்.

இதில் சமூக பணிக்குழு நண்பர்கள் அறக்கட்டளை செயலாளர் சமீர், அத்திக் குழு வானவன், ஒரு பிடிச்சோறு நாகராசன், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத் தலைவர் பாலாஜி, கடவுள் சேவை நண்பர்கள் குழு நந்தா, நல் உணவு ராஜேஷ், டி4வி அசோக், களத்துமேட்டு சூரியன் உள்ளிட்ட சமூக சேவகர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அருண் அழகாக தொகுத்து வழங்கினார். செங்குன்றம் எலைட் பள்ளியின் துணை முதல்வர் பிரமோத், பீலிக்கான் ஆகியோர் நன்றி நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இதில் எலைட் பள்ளிக் குழுமத்தின் ஆசிரிய-ஆசிரியைகள், முன்னாள் மாணவ-மாணவிகள், காக்கை அறக்கட்டளை, மக்களை பாதை நிர்வாகிகள், உறுப்பினர்கள், புழல் ஏரி நடைபயிற்சி சங்கத்தின் பொருளாளர் குமார், சட்ட ஆலோசகர் ஆர்.செல்வமணி, ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.செல்வக்குமார், திருமலை, செயற்குழு உறுப்பினர் இம்மானுவேல் சுந்தர் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பால் செபாஸ்டின் கூறும் போது, புழல் ஏரிக்கரையையொட்டி 1367 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. இது ஒரு துவக்கம் தான், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து 1 கோடி பனை விதையை விதைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை என்றார்.

செய்தியாளர் – ரெட்ஹில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *