பூந்தமல்லி அருகே கொரட்டூர் ஊராட்சியில், மக்கள் சபை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துரையாடல்…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொரட்டூர் ஊராட்சியில், மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடினார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு. நாசர் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி. ஜி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட, ஸ்டாலின் அவர்கள் கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் அவர்களிடையே பேசுகையில், ” இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சியிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், நேற்று இரவு திடீரென கிராமசபை கூட்டத்தை இந்த அரசு ரத்து செய்துள்ளது. இந்த அரசின் கையாளாகாத தனத்தையே, இந்த சம்பவம் உறுதிபடுத்தி உள்ளது எனவும், மக்கள் வருங்காலத்தில் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும்.”எனவும் பேசினார்.
செய்திகள் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777
