Fri. Oct 23rd, 2020

திருவள்ளூர் அருகே, பட்டரைபெரும்புதூர் ஏரி கரைகளில் பனை விதைகளை நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்டரைபெரும்புதூரில், ஏரியில் பொதுப்பணித் துறை சார்பாக பனை விதை நடப்பட்டது.

குடிமராமத்துப் பணி என்பது மக்கள் தங்கள் உழைப்பு மற்றும் பொருள் பங்களிப்பு மூலம் நீர் ஆதாரங்களை சீர் செய்து நிர்வகித்தல் ஆகும் . தமிழ்நாட்டில் நீர் நிலைகளை புனரமைக்க அந்தந்த பாசன அமைப்பின் விவசாயிகளால் கூட்டாக குடிமராமத்து என்ற பெயரில் சீரமைப்பு பணிகள் செய்து நீர் மேலாண்மை சிறப்பாகவும் செம்மையாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

.

தமிழக முதலவர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு , வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ள குடிமராமத்து திட்டப் பணிகளில் நான்காவது கட்டமாக , அரசு ஆணை வாயிலாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு 32,59.34 இலட்சம் மதிப்பீட்டுத் தொகைக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, 80 ஏரிகளில் அந்தந்த விவசாய சங்கங்கள் வாயிலாக பணிகள் துவங்கப்பட்டு அனைத்து பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது .

இப்பணிகளால், சுமார் 15190.45 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற உறுதி செய்யப்பட்டுள்ளது . இந் நிதியாண்டில் ( 2020-21 ) குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணி மேற்கொள்ளப்படும் ஏரிகள் மற்றும் வாய்க்கால்களில், உள்ள ஆக்ரமணங்கள் அகற்றப்பட்டுள்ளது .

ஏரியின் எல்லை பகுதிகளில் சமூக பணிக்குழு அறக்கட்டளை வயிலாக, பனை விதைகள் நடுவதற்க்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது . இதில் முதற்கட்டமாக , 500 விதைகள் தற்போது பட்டரைபெரும்புதூர் ஏரியில் நடப்பட்டு உள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணி மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து ஏரிகளிலும் சுமார் 15000 பனை விதைகள் நடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிகளில் செயற்பொறியாளர் கொசஸ்தலையாறு வடிநிலகோட்டம் சி.பொதுபணித்திலகம் உதவி செயற்பொறியாளர் .கார்திகேயன் , உதவி பொறியாளர்கள் ரமேஷ் , சதீஷ்குமார் , தன்னார்வ தொண்டு பிரதிநிதிகள் மற்றும் சமூக பணி அறக்கட்டளை நிர்வாகிகள் சமீர், பாலாஜி உட்பட பல அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *