Mon. Oct 19th, 2020

கும்முடிபூண்டி யில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் உறுப்பினர் சேர்க்கை விழா…

1 min read

கும்மிடிப்பூண்டி அடுத்த கரடிபுத்தூர் மற்றும் கண்ணன்கோட்டை பகுதியில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு, திருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி வழக்கறிஞர் சித்ரா தியாகராஜன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி தொகுதி தலைவர் ஜோதி வரவேற்றார். காங்கிரஸ் வட்டார தலைவர் எஸ்.எஸ்.பெரியசாமி, போட்டோ செல்வம், புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் கரடிபுத்தூர் ஊராட்சி தலைவர் ஹரிதா பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவரும், வழக்கறிஞருமானட டி.கே.வி.சுதா ராமகிருஷ்ணன் பங்கேற்று உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்து
சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ” கிராமப்புற பெண்கள் எப்போதும் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், தைரியம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இக்கால சூழலில் பெண்கள் தவறுகளை கண்டால் அதனை சுட்டி காட்டவும், தட்டி கேட்கவும் தயாராக இருக்க வேண்டும் என்றவர், காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்ல காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு அதிக அளவில் இருந்தது என்றார்.”

.

தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உறுப்பினர் சேர்க்கை அட்டையை வழங்கினார். இதனை தொடர்ந்து கண்ணன் கோட்டையில் காங்கிரஸ் மகளிர் அணிக்கு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ந்தது. இதில் உறுப்பினர்களாக பங்கேற்ற பெண்கள், “தங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலையில் உரிய கூலி கிடைப்பதில்லை” என்றும், அதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும்
கோரிக்கை வைத்தனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *