Fri. Oct 23rd, 2020

சோழவரம் ஒன்றியம், ஒரக்காடு ஊராட்சியில் பனை விதை நடும் விழா…

1 min read

சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரக்காடு ஊராட்சியில் உள்ள வீரகுளம் அருகே பனை விதை நடும் விழா ஊராட்சி மன்றத் தலைவர் நீலா சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் லட்சுமணன் வரவேற்றார்.

சோழவரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன், சோழவரம் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு துவக்கி வைத்தனர். இதில் அரசு அதிகாரிகள் அருள், மகேந்திர பாண்டியன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் புனிதா, சோனியா, சகிலா, நித்யா, ஜெய்சித்ரா, ஊராட்சி செயலாளர் ரவி, சமூக ஆர்வலர் பாரதி கண்ணப்பன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் – ரெட்ஹில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *