புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில், பனை விதை நடும் நிகழ்ச்சி…
1 min read
செங்குன்றம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள வண்ணான் குளம் சுற்றிலும் குளக்கரையின் ஓரமும் பனை விதை நடவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வு எலைட் பள்ளிக் குழுமம் மற்றும் ORGN அரசு பள்ளி 95ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு மாணவர்கள் சார்பில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஆஷாகல்விநாதன் தலைமையில் பனை விதை நடவு நிகழ்வு நடைபெற்றது. எலைட் பள்ளி குழுமத்தின் முதன்மை நிர்வாகி முனைவர் பால் செபாஸ்டின் மற்றும் ஓஆர்ஜிஎன் முன்னாள் மாணவர்கள் சார்பாக முரளி சிறப்பு உரை ஆற்றினர்.

ஊராட்சி துணைத் தலைவர் செல்வி மதுரைமுத்து, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வழக்கறிஞர் ஆர்.செல்வமணி, ஜி.திருநாவுக்கரசு, வழக்கறிஞர் சு.செந்தில்குமார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் கிராம பிரமுகர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

ஊராட்சி செயலர் டில்லி நன்றி தெரிவித்தார். எலைட் பள்ளி அருண் தொகுப்புரை வழங்கினார். இதில், எலைட் பள்ளி துணை முதல்வர் பிரமோத், பீலிக்கான் உள்ளிட்ட ஆசிரிய – ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்த நிகழ்வில், சுமார் 750 பனை விதைகள் நடப்பட்டன.

செய்தியாளர் – ரெட்ஹில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777