செங்குன்றம் காந்திநகரில், கண்காணிப்பு கேமராவை துவக்கி வைத்தார் எஸ்.பி. அரவிந்தன்…
1 min read
செங்குன்றம் அடுத்த காந்திநகர் ,பகுதியில் உள்ள திருவள்ளூர் நெடுஞ்சாலை, ஆவடி சாலை சந்திக்கும் கூட்டுசாலையில், உள்ள புதுப்பிக்கப்பட்ட உதவி காவல் மையம் திறப்பு மற்றும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் துவக்க விழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட உதவி காவல் மையம் மற்றும் 16 கண்காணிப்பு கேமராக்களை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பொன்னேரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கல்பனா தத், சோழவரம் காவல் நிலைய ஆய்வாளர் நாகலிங்கம், நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தவல்லி டில்லி, துணைத்தலைவர் செல்வி பாலகிருஷ்ணன், காவல் உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் இந்த நிகழ்வின் இறுதியில், செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இந்தப் பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களில் யாரும் தப்ப முடியாத அளவில் துல்லியமாக கண்டறிந்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய உதவியாக இந்த அதிநவீன கண்காணிப்பு கேமரா இருக்கும். ஒரே மாதத்தில் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இதுவரை 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது ” என கூறினார்.
செய்தியாளர் – ரெட்ஹில்ஸ், நண்பன் அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
