Fri. Oct 23rd, 2020

திருவாலங்காடு, மாவூர் பகுதி சாலை ஆக்கரமிப்பை அகற்ற, எம்.எல்.ஏ வி.ஜி.ஆர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை…

1 min read

திருவள்ளுர் தொகுதி திருவாலங்காடு ஒன்றியம் மாவூர் கிராமத்தில், ஊரக மேம்பாடு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலை துறை மூலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் திருத்தணி – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை முதல் ஏரிக்கரை வரை உள்ள 200 மீட்டர் தொலைவிற்க்கு வயல்வெளிக்கு மத்தியில் செல்லும் கிராம சாலையை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

இது குறித்து, பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் அவர்கள் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்களை நேரில் சந்தித்து அந்த ஆக்கிரமிப்பை அகற்றி சாலை பணிகளை தொய்வில்லாமல் மீண்டும் தொடங்க வலியுறுத்தியும் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பழுதடைந்த நிலையில் உள்ளது. அந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தியும் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். அப்போது அவருடன் திமுக ஒன்றிய செயலாளர் கூளூர் ராஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் மீனா உமாபதி மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பலர் இருந்தனர்.

செய்திகள் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *