பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில், வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார்…
1 min read
மாவட்டம் பூவிருந்தவல்லி தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் ஒன்றிய ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி பார்வையிட்டு, பின் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு அதிகாரியிடம் ஆய்வு மேற்கொண்டார்.

ஈக்காடு, தலக்காஞ்சேரி, மேலானூர், காரிகலவாக்கம், வெள்ளியூர், பாக்கம், புலியூர் ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலை பணிகள், பசுமை வீடு கட்டும் பணிகள், அரசு பள்ளி கட்டிடம் கட்டும் பணிகள், கால்நடை மருத்துவமனையில் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் மற்றும் நெல் கொள்முதல் கிடங்கு அமைக்க உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

மேலும், பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனடியாக துறையை சார்ந்த அதிகாரியிடம் பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் உத்தரவிட்டார். அப்போது திருவள்ளூர் வடக்கு ஒன்றிய செயலாளர், புஜ்ஜி.ராமகிருஷ்ணன், திருவள்ளூர் ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், திருவள்ளூர் ஒன்றியக்குழு துணை தலைவர் பக்கத்துல கான், மாவட்ட கவுன்சிலர்கள் டி.தென்னவன், இந்திரா பொன்குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் எல்.சரத்பாபு, கசவா சங்கீதா ராஜீ, டி.எம்.எஸ்.வேலு, சாந்திதரணி, வி.ஹரி,

திருவள்ளூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் வி.சிற்றரசு, விமலா குமார், மதுரை வீரன், வி.ராமானுஜம், பி.கே.இ.கபிலன், ஈக்காடு ஊராட்சி செயலாளர் வேலு(எ) வேலாயுதம், ஊராட்சி செயலாளர்கள் பாண்டியன், துரை கண்ணு, டி.மூர்த்தி, ஜஸ்டின், துரை கண்ணு, ஊராட்சி மன்ற தலைவர் குட்டி (எ) பக்தவச்சலம், சிவாசங்கர், லாசன சந்தியா, மற்றும் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777