பொன்னேரி அரசு கல்லூரியில், தமிழக அரசு கூடுதலாக இடங்கள் ஒதுக்கீடு, மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொள்ள முதல்வர் அறிவிப்பு…
1 min read
திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில், உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி இயங்கி வருகிறது. இது சென்னை பல்கலைக்கழகதுடன் இணைந்து செயல்பட கூடிய தன்னாட்சி கல்லூரி ஆகும். இக் கல்லூரியில், மிகவும் பின் தங்கிய மக்கள் அதிகம் வசிக்க கூடிய பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, கும்முடிபூண்டி, ஊத்துகோட்டை, போன்ற பகுதிகளில் இருந்து தான், படிக்க மாணவ, மாணவிகள் வருகின்றனர்.

அதனால், இந்த கல்லூரியில் ஆண்டிற்காண்டு மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கூடி கொண்டே போகின்றன. அதற்க்கு ஏற்றார் போல் அரசும் கல்லூரிக்கு தேவையான புதிய வகுப்புகளையும், கூடுதலான கட்டிடங்களையும், அமைத்து கொடுத்து கொண்டு உள்ளன. இந்த அறிய வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், தற்போது கல்லூரி முதல்வர், தே. சேகர் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில், ” பி.எஸ்.சி படிப்பில், கணிதம், இயற்பியல், தாவரவியல், போன்ற பாடப்பிரிவில், அரசு கூடுதலாக இருக்கைகள் அமைத்து கொடுத்துள்ளதால். இந்தாண்டு தாராளமாக இருக்கைகள் உள்ளன. இதை மாணவ, மணவிகள் பயன்படுத்தி கொள்ளுமாறும் மேலும், ஏற்கனவே விண்ணபித்து இது வரை சேராதவர்களும் மேற்கண்ட பாடபிரிவுகளில் சேரலாம் ” என அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777