Mon. Oct 19th, 2020

செங்குன்றத்தில், 510 கிலோ கஞ்சா பிடித்த காவல்துறையினருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டு…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பாடியநல்லூர் சோதனைச் சாவடி அருகே மாதவரம் மாவட்ட காவல் துணை ஆணையர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை சிறப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தார் டேங்கர் லாரியில் நூதனமாக அறை போன்று வடிவமைத்து அதில் 510 கிலோ எடை கொண்ட 182 பாக்கெட்டுகளில் அடைத்து கொண்டு வந்த லாரி ஓட்டுனர் நாராயணன், கிளீனர் சுந்தர் ஆகிய இருவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் டேங்கர் லாரியை சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் செங்குன்றம் காவல்நிலையத்திற்கு வருகை தந்து நேரில் பார்வையிட்டு சிறப்பாக செயல்பட்ட 7 பேர் கொண்ட சிறப்பு பிரிவு காவல்துறை குழுவினரான உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், முதல் நிலை காவலர்கள் டி.கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதர், மணிவண்ணன், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சந்தோஷ்குமார், தினேஷ் ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையாளர் ஏ.அருண், வடசென்னை காவல் இணை ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன், மாதவரம் மாவட்ட காவல் துணை ஆணையாளர் டாக்டர் கே.பாலகிருஷ்ணன், புழல் சரக காவல் உதவி ஆணையர் ஆர்.ஸ்ரீகாந்த், காவல் ஆய்வாளர் ஜெகநாதன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், கஞ்சா மற்றும் போதை பொருளை ஒழிப்பதற்காக தனி நடவடிக்கைகளை மேற்கொண்டு மூன்று மாதத்தில் 1680 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 201வழக்குகள் பதிவு செய்து 368 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 67 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

செங்குன்றத்தில் 510 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மதிப்பு 70 லட்ச ரூபாய் இருக்கும் என தெரிவித்த அவர் மேலும் சிலரை தேடி வருவதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் சென்னை முழுவதும் சிறு மொத்த கஞ்சா வியபாரிகளையும் ஆந்திராவில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்துள்ளதாகவும்ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு தொடர்ந்து கஞ்சா கடத்தி வருவதாக தகவல் வந்துள்ளதாகவும் அதைக் கண்டறிந்து பிடிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்த அவர் தொடர்ந்து சில கொலைகள் நடைபெறுகிறது. அனைத்து வழக்குகளிலும் கொலையாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

ரவுடிகளை கணக்கெடுத்து கைது செய்யும் பணியும் நடைபெற்று வருகின்றது. அனைத்துக் குற்றங்களும் தடுக்க முயற்சியும் நடைபெறுகிறது என்றும் மைனர் குற்றங்களை தடுத்தும், செல்போன் திருட்டு உள்ளிட்ட குற்றங்களையும் கண்டறிந்து கைது செய்திருக்கின்றோம். இரண்டு மாத காலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குற்றங்கள் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. தற்போது தார் டேங்கர் லாரியில் 510 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கஞ்சா வழக்கில் மேலும் சிலரை விரைவில் கைது செய்வோம் எனவும் தெரிவித்தார்.

செய்தியாளர் – ரெட்டில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *