திருவள்ளூர் மாவட்டம், அண்ணாமலைச்சேரி ராதா ருக்மணி – வேணுகோபால் ஆலய மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது…
1 min read
திருவள்ளூர் மாவட்டம், அண்ணாமலைச்சேரியில் அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால் சுவாமி ஆலய மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

காலை 4 மணிக்கு தொடங்கிய கணபதி,லட்சுமி,நவக்கிரக பூஜையானது ஓமம் எனப்படும் புனிதநீர் தெளிக்கப்பட்டு சூரிய வழிபாட்டுடன் மகா கும்பாபிஷேகம் நடந்தேறியது. பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அண்ணாமலைச்சேரி கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற
இந்த நிகழ்ச்சியில்,

சிறுளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் உஷா கணேசன், மீஞ்சூர் ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார், துணைத் தலைவர் அரசம்மாள் ரவி மற்றும் வார்டு உறுப்பினர்கள் லோகன், இறால் பண்ணை உரிமையாளர் ஆதிகேசவன் சாந்தி கிராம நிர்வாகிகள் முனுசாமி,சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777