Fri. Oct 23rd, 2020

புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் அரசினர் நடுநிலை பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட, அடிக்கல் நாட்டு விழா…

1 min read

புழல் ஒன்றியம்
விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட அடிகல் நாட்டு விழா ஊராட்சிமன்ற தலைவர் பாரதிசரவணன் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சிமன்ற தலைவர் பாரதிசரவணன் அவர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, புதிய பள்ளி கட்டிடம், நபார்டு – 25 திட்டத்தின் மூலம் புதியதாக நான்கு வகுப்பறைகளை கொண்ட மாடி கட்டிடமாக கீழ் தளம், மேல் தளம் கட்டுவதற்கு, ரூ. 52,36,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த அடிகல் நாட்டு விழாவிற்க்கு, அரசினர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் நஜ்முன்னிசா, துணைத்தலைவர் என்.கலாவதி நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்வில், செயற்பொறியாளர் எஸ்.அன்புசாந்தி, உதவி பொறியாளர் அ.மீனாட்சி சுந்தரம், விளாங்காடுபாக்கம் ஊராட்சி திமுக கழக செயலாளர் வழக்கறிஞர் பெ.சரவணன், வார்டு உறுப்பினர்கள் ஏ.மாரி, கே.சத்தியசீலன், ஆர்.தர்மி ரவி, என்.ஆனந்தி நாகராஜன், எஸ்.ரதி சீனிவாசன், எஸ்.அருணாதேவி சீனு, என்.மாரியம்மாள் நரசிம்மன், கே.வி.மகேந்திரன், ஒப்பந்ததாரர் எம்.சம்பத் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள், கிராம பெரியோர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ரெட்ஹில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *