பெரியபாளையம் பேங்க் ஆப் பரோடா வங்கியின் சார்பில், ,விவசாயிகள், மகளிர் குழுக்களுக்கு ரூ.1கோடியே 10லட்சம் கடன் வழங்கப்பட்டது…
1 min read
பேங்க் ஆப் பரோடா வங்கியின் சார்பில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 15 தேதி வரையில் விவசாயிகளுக்கான இருவார விழா நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

அதே போல் இந்த ஆண்டு சென்னை மண்டலத்தின் சார்பில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியின் சார்பில் விவசாயிகளுக்கான இருவார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, பெரியபாளையம் வங்கி கிளை மேலாளர் நந்த கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு சென்னை கிராமிய பிராந்திய மேலாளர் வி,குணசேகரன், முதன்மை மேலாளர்கள் பாலசுப்ரமணியம், சுதர்சனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு விருந்தினராக சென்னை மண்டல துணை பொதுமேலாளர் கே.வி.சலபதி நாயுடு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது, பேங்க் ஆப் பரோடா வங்கியின் சார்பில் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கான இருவார விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அப்போது கிராமப்புற மக்களுக்கு ஆடு,மாடு,பயிர் கடன்,வீட்டுக் கடன்,சிறு தொழில் கடன்,நகை கடன் உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறோம். மேலும், வாடிக்கையாளரிடம் வருடம்தோறும் ரூ.330 பெற்றுக்கொண்டு ரூ.இரண்டு லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை சிறப்பாக மேற்கொண்டு வருகிறோம். இதனால் வாடிக்கையாளர்களின் நலனைக் காப்பதில் எங்கள் வங்கி சிறந்து விளங்குகிறது. எனவும்

மேலும், இவ்விழாவில்,மகளிர் சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள்,சிறு தொழில் முனைவோர்கள்,நகைக் கடன் பெறுவோர் என மொத்தம் ரூ.1கோடியே 10லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவும் கூறினார். முடிவில், வங்கியின் துணை மேலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

செய்தியாளர் சீனிவாசன்
நிழல் இன் – 8939476777